ரத்து செய்யப்பட்ட பயணசீட்டிற்கான பணத்தைத் திருப்பி தருவதாகக் கூறி, வங்கிக் கணக்கு விவரங்களை யாராவது தொலைபேசியில் கேட்டால், தெரிவிக்கவேண்டாம் - ரயில்வேத்துறை எச்சரிக்கை


பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

ரயில்வே அதிகாரிகள் பேசுவது போல, பயணிகளை சில மர்ம நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான கட்டணத்தைத் திருப்பி தருவதாகக் கூறி, அவர்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களை கேட்பதாக புகார்கள் வந்து உள்ளன.

இந்திய ரயில்வேயும், அதன் ஊழியர்களும் யாரிடமும் அவர்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களை கேட்கமாட்டார்கள். ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான பணம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவுவைக்கப்படும். அதேபோல், ரயில் முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்து இருந்தால், அங்கேயே பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே யாரிடமும் தங்களது டெபிட், கிரெடிட் கார்டு, சிவிவிஎண்கள், ஏடிஎம் பின் நம்பர், பான்கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். யாராவது தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோசடியில் ஈடுபட்டால், உடனடியாக 138 என்ற உதவி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


 

'Do not fall prey to imposters and fake calls seeking bank details for refunds '

- A  word of caution for Rail passengers

 

Instances have been reported by Railway passengers alleging that they received calls from unscrupulous elements posing as Railway Officials seeking bank details to effect transfer of refunds .  

Rail passengers and general public are hereby cautioned not to fall prey to such imposters and not share the details such as as Debit/Credit Card numbers, CVV number, OTP, ATM PIN number, PAN number, Date of Birth, etc.   Indian Railways or its employees never ask for any personal banking information.

Refunds of Railway passengers, who have booked tickets online on IRCTC website, are directly credited to the bank account from which payment of ticket was made.

Refunds for tickets brought across Passenger Reservation System counters are made at the counter on submission of valid documents within the prescribed time limit.

Passengers are requested to report fraudulent calls received, if any, by dialing Railway Passenger Helpline No.138