திருவண்ணாமலையில் இருந்து சென்னை மற்றும் திருச்சிக்கு நேரடி ரயில் சேவை இயக்க ரயில்வே வாரியத்திற்க்கு தெற்கு ரயில்வே பரிந்துரை

திருவண்ணாமலை - தாம்பரம் இடையே விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில், கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் அகல ரயில் பாதை பணிக்காக நிறுத்தப்பட்டது.

பின்னர் அகல ரயில் பாதை பணி நிறைவு பெற்றவுடன் மீண்டும் அந்த ரயில் இயக்கப்படவில்லை.

இதனையடுத்து திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு மீண்டும் ரயில் சேவையை தொடங்க வேண்டும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதே சமயம் பௌர்ணமி கிரி வலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை - வேலூர் மற்றும் திருச்சி - திருப்பாதிரிபுலியூர் இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் திருவண்ணாமலை தற்காலிகமாக வரை நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சென்னை கடற்கரை - வேலூர் மற்றும் திருச்சி - திருப்பாதிரிபுலியூர் இடையே இயக்கப்படும் ரயில்களை திருவண்ணாமலை வரை நீட்டிக்க ரயில்வே வாரியத்திற்க்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.

இந்த இரண்டு பரிந்துரைகளை, ரயில்வே வாரியம் அங்கீகரிக்கும் பட்சத்தில் திருவண்ணாமலை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது.