சென்னை சென்ட்ரல் 🔄 திருவனந்தபுரம் சிறப்பு ரயில்.
மறுமார்கத்தில் வண்டி எண் 02696 திருவனந்தபுரம் ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 5:15க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். இந்த ரயிலின் முதல் சேவை டிசம்பர் 9ம் தேதி.
தமிழகத்தில் இந்த சிறப்பு ரயில் அரக்கோணம், காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல் 🔄 மங்களூர் சிறப்பு ரயில்.
வண்டி எண் 02685 சென்னை சென்ட்ரல் ➡️ மங்களூர் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து மாலை 5மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9மணிக்கு மங்களூர் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலின் முதல் சேவை டிசம்பர் 8ம் தேதி.
மறுமார்கத்தில் வண்டி எண் 02686 மங்களூர் ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், மங்களூரில் இருந்து மாலை 4:35க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். இந்த ரயிலின் முதல் சேவை டிசம்பர் 9ம் தேதி.
தமிழகத்தில் இந்த சிறப்பு ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் போத்தனுர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மங்களூர் மார்க்கமாக பயணிக்கும் போது மொரப்பூர் ரயில் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும்.