சென்னை சென்ட்ரல் 🔄 சாய் பிரசாந்த்தி நிலையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து டிசம்பர் 11, 18, 25ம் தேதியும், சாய் பிரசாந்த்தி நிலையத்தில் இருந்து 12, 19, 26ம் தேதியும் சிறப்பு ரயில் இயங்கவுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11:30க்கு புறப்படும் 06073 சாய் பிரசாந்த்தி சிறப்பு ரயில், மறுநாள் காலை 9மணிக்கு சாய் பிரசாந்த்தி ரயில் நிலையம் சென்றடையும்.
மறுமார்கத்தில் சாய் பிரசாந்த்தி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6:20மணிக்கு புறப்படும், 06074 சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், மறுநாள் காலை 5:05க்கு சென்னை வந்து சேரும்.
இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;