சென்னை எழும்பூர் 🔄 நாகர்கோயில் இடையே விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக வாராந்திர சிறப்பு ரயில்


சென்னை எழும்பூர் 🔄 நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து டிசம்பர் 10ம் தேதி முதல் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலிலும், நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 11ம் தேதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலிலும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.


சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6:55க்கு புறப்படும் 06063 நாகர்கோவில் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:30க்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறுமார்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4:15க்கு புறப்படும் 06064 சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், மறுநாள் காலை 4:45க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் இருமார்கத்திலும் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு டிசம்பர் 2ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும்.