தாம்பரம் 🔄 நாகர்கோவில் இடையே வாரத்தில் மூன்று நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
அதன்படி தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 16ம் தேதி முதலும், நாகர்கோவிலில் இருந்து 17ம் தேதி முதலும் இந்த சிறப்பு ரயில் இயங்கவுள்ளது.
தாம்பரத்தில் இருந்து ஞாயிறு, திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் இரவு 9:25க்கு புறப்படும் 06065 நாகர்கோவில் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:30க்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறுமார்கத்தில் நாகர்கோவிலில் இருந்து திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 4:15மணிக்கு புறப்படும், 06066 தாம்பரம் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 4:15க்கு தாம்பரம் வந்து சேரும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;
T.No.06065 TBM-NCJ Spl | Stations | T.No.06066 NCJ-TBM Spl | |
19.25 | Tambaram | 04.15 | |
19.53/19.55 | Chengalpattu | 03.23/03.25 | |
21.30/21.35 | Villupuram | 01.53/01.55 | |
22.15/22.17 | Vridhachalam | 00.48/00.50 | |
00.25/00.30 | Tiruchchirappalli | 23.15/23.20 | |
01.37/01.40 | Dindugal | 22.02/22.05 | |
02.30/02.35 | Madurai | 21.00/21.05 | |
03.13/03.15 | Virudhunagar | 19.53/19.55 | |
03.35/03.37 | Satur | 19.08/19.10 | |
03.58/04.00 | Kovilatti | 18.43/18.45 | |
05.35/05.40 | Tirunelveli | 17.35/17.40 | |
06.28/06.29 | Valliyur | 16.45/16.46 | |
07.30 | Nagarcoil Jn | 16.15 |