கடந்த ஆண்டு ரூ.53 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டு 87 சதவீதம் வருவாயில் இழப்பு ஏற்படக்கூடும்.
பயணிகள் ரயில்சேவையில் ஏற்படும் இழப்புகள், சரக்கு ரயில் போக்குவரத்து மூலம் ஈடுகட்டப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கையாளப்பட்ட சரக்குகளின் அளவை டிசம்பர் மாதத்திலேயே எட்டிவிட்டோம். ஆனால், பயணிகள் ரயில்சேவை ரத்து செய்யப்பட்டதால், மிகப்பெரிய இழப்பு பயணிகள் ரயில்சேவை பிரிவில் ஏற்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் 1,089 சிறப்பு ரயில்கள் ரயில்வே துறை சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 30 முதல் 40 சதவீதம் வரை மட்டுமே பயணிகள் பயணிக்கின்றனர்.
நாடுமுழுவதும் பயணிகள் ரயில்சேவை எப்போது சீரடையும், இயல்புக்கு வரும் என்பதற்கான உறுதியான தேதி எதையும் கூறுவது சாத்தியமில்லை. மாநில அரசுகளுடன், ரயில்வே மண்டல பொதுமேலாளர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எப்போது, எந்தெந்த இடங்களுக்கு மட்டும் ரயில்களை இயக்கலாம் என மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கிறார்கள்.
அதே சமயம் ரயி்ல்வே மூத்த அதிகாரிகள் சூழலைக் கூர்ந்து கண்காணித்து வருகிறார்கள், பயணிகள் ரயில்வே சேவை படிப்படியாகவே இயல்புநிலைக்கு வரும் என்று ரயில்வே வாரிய தலைவர் யாதவ் கூறினார்.