பயணிகள் ரயில் சேவை மூலம் ரூ.4600 கோடி வருவாய் : இது கடந்த ஆண்டை விட, 87 சதவீதம் குறைவு

ரயில்வே வாரிய தலைவர் வி.கே. யாதவ், டில்லியில் நேற்று பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், பயணியர் ரயில் சேவைகள் வாயிலாக, கடந்த ஆண்டு, 53 ஆயிரம் கோடி ரூபாய், வருவாய் கிடைத்ததாகவும். இந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாக, பயணியர் ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும். இதன் விளைவாக, வருவாய் 4,600 கோடி ரூபாயாக, குறைந்ததாகவும். இது, கடந்த ஆண்டை விட 87 சதவீத சரிவு என்றும் குறிப்பிட்டார்.

மேலும் சரக்கு ரயில் சேவைகள் வாயிலாக, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக வருவாய் கிடைத்ததாகவும். குறைந்த அளவில் ரயில்கள் இயங்குவதால் கடந்த ஆண்டை விட, 12 சதவீதம் குறைவான நிதியையே, ரயில்வே நிர்வாகம், இந்த ஆண்டு செலவு செய்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.