ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

1. மதுரை ➡️ பிகானீர் ➡️ மதுரை குளிர்சாதன வாராந்திர சிறப்பு ரயில்.

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 7, 14, 21 மற்றும் 28ம் தேதிகளில் பகல் 11:55க்கு புறப்படும், 06053 பிகானீர் சிறப்பு ரயில், மூன்றாம் நாள் மாலை மணிக்கு பிகானீர் ரயில் நிலையம் சென்றடையும்.

மருமார்கத்தில், பிகானீர் ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 10, 17, 24 மற்றும் 31ம் தேதிகளில் பிற்பகல் 3மணிக்கு புறப்படும் 06054 மதுரை சிறப்பு ரயில், மூன்றாம் நாள் இரவு 6:30க்கு மதுரை ரயில் நிலையம் வந்து சேரும்.

தமிழகத்தில் இந்த ரயில் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

2. சென்னை எழும்பூர் ➡️ ஜோத்பூர் ➡️ சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரயில்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 2, 9, 16, 23 மற்றும் 30ம் தேதிகளில் மாலை 3:30க்கு புறப்படும், 06067 ஜோத்பூர் சிறப்பு ரயில், மூன்றாம் நாள் காலை 8 மணிக்கு ஜோத்பூர் ரயில் நிலையம் சென்றடையும்.

மருமார்கத்தில், ஜோத்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 4, 11, 18, 25 மற்றும் பிப்ரவரி 1ம் தேதிகளில் இரவு 11:55 மணிக்கு புறப்படும் 06068 சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், மூன்றாம் நாள் மாலை 4:10க்கு எழும்பூர் ரயில் நிலையம் வந்து சேரும்.

3. சென்னை சென்ட்ரல் ➡️ ஜெய்ப்பூர் ➡️ சென்னை சென்ட்ரல் வாரம் இருமுறை சிறப்பு ரயில்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டிசம்பர் 27, 29, ஜனவரி 3, 5, 10, 12, 17, 19, 24, 26, 31 மற்றும் பிப்ரவரி 2ம் தேதிகளில் மாலை 5:40க்கு புறப்படும், 02967 ஜெய்ப்பூர் சிறப்பு ரயில், மூன்றாம் நாள் காலை 6:45 மணிக்கு ஜோத்பூர் ரயில் நிலையம் சென்றடையும்.

மருமார்கத்தில், ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து டிசம்பர் 27, ஜனவரி 1, 3, 8, 10, 15, 17, 22, 24, 29 மற்றும் 31ம் தேதிகளில் இரவு 7:35 மணிக்கு புறப்படும் 02968 சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், மூன்றாம் நாள் காலை 8:20க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும்.

4. கோயம்புத்தூர் ➡️ ஜெய்ப்பூர் ➡️ கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில்.

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 1, 8, 15, 22 மற்றும் 29ம் தேதிகளில் காலை 9:25க்கு புறப்படும், 02969 ஜெய்ப்பூர் சிறப்பு ரயில், மூன்றாம் நாள் காலை 6:45 மணிக்கு ஜோத்பூர் ரயில் நிலையம் சென்றடையும்.

மருமார்கத்தில், ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து டிசம்பர் 29, ஜனவரி 5, 12, 19 மற்றும் 26ம் தேதிகளில் இரவு 7:35 மணிக்கு புறப்படும் 02970 கோயம்புத்தூர் சிறப்பு ரயில், மூன்றாம் நாள் மாலை 4:50க்கு கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்து சேரும்.

மேற்கொண்ட ரயில்களுக்கு முன்பதிவு நடைபெற்றது வருகிறது.