ஜோலார்பேட்டையில் இருந்து பெங்களூருக்கு ஜனவரி 4ம் தேதி முதல் இரண்டு ஜோடி சிறப்பு ரயில்கள் : வாரத்தில் 6 நாட்கள் மட்டும் இயங்கும் - தென் மேற்கு ரயில்வே அறிவிப்பு

நாடு முழுவதும் ரயில் சேவைகள் படிப்படியாக ரயில்வேத்துறையுணர் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தமிழகத்தின் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு ஜனவரி 4ம் தேதி முதல் இரண்டு ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென் மேற்கு ரயில்வே மண்டலம் அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

🚂 பெங்களூரில் இருந்து காலை 8:35க்கு புறப்படும், 06253 ஜோலார்பேட்டை சிறப்பு ரயில், அன்றைய தினம் பகல் 12:15க்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்து சேரும்.

🚂 பெங்களூரில் இருந்து மாலை 5:30க்கு புறப்படும், 06251 ஜோலார்பேட்டை சிறப்பு ரயில், அன்றைய தினம் இரவு 8:35க்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்து சேரும்.

🚂 ஜோலார்பேட்டையில் இருந்து அதிகாலை 4:25க்கு புறப்படும், 06252 பெங்களூர் சிறப்பு ரயில், அன்றைய தினம் காலை 7:55க்கு பெங்களூர் ரயில் நிலையம் சென்றடையும்.

🚂 ஜோலார்பேட்டையில் இருந்து பிற்பகல் 2:45க்கு புறப்படும், 06254 பெங்களூர் சிறப்பு ரயில், அன்றைய தினம் ம்மாலை 6:45க்கு பெங்களூர் ரயில் நிலையம் சென்றடையும்.

மேற்கொண்ட நான்கு சிறப்பு ரயில்களும் இடையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். மேலும் வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே இயங்கும்(ஞாயிற்றுக்கிழமைகளில் சேவை கிடையாது).

மேற்கொண்ட சிறப்பு ரயில்கள் மின்தொடர்(மேமு) ரயிலின் பெட்டிகள் கொண்டு இயக்கப்படவுள்ளன.

அட்டவணை விவரம் 👇

அட்டவணை நன்றி - தென் மேற்கு ரயில்வே