கொரோனோ தொற்று காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த நீலகிரி மலை ரயில் சேவை வருகின்றன டிசம்பர் 31ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி மேட்டுப்பாளையம் 🔄 உதகை இடையே ஒரு ஜோடி ரயில் சேவையும், குன்னூர் 🔄 உதகை இடையே 3 ஜோடி ரயில் சேவைகளும் இயக்கப்படவுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு ;
06136/06137 மேட்டுப்பாளையம் 🔄 உதகை நீலகிரி சிறப்பு மலை ரயில். (தினசரி)
06136 மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7:10க்கு புறப்படும் சிறப்பு ரயில், பகல் 11:55 உதகை ரயில் நிலையம் சென்றடையும்.
06137 மறுமார்கத்தில் உதகையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மாலை 5:30க்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்து சேரும்.
06141/06143/06138 குன்னூர் ➡️ உதகை நீலகிரி சிறப்பு மலை ரயில். (தினசரி)
06141 குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 9மணிக்கு உதகை ரயில் நிலையம் வந்து சேரும்.
06143 குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து பகல் 12:35க்கு புறப்படும் சிறப்பு ரயில், பிற்பகல் 1:45 மணிக்கு உதகை ரயில் நிலையம் வந்து சேரும்.
06138 குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மாலை 5:10மணிக்கு உதகை ரயில் நிலையம் வந்து சேரும்.
06139/06142/06140 உதகை ➡️ குன்னூர் நீலகிரி சிறப்பு மலை ரயில். (தினசரி)
06139 உதகை ரயில் நிலையத்தில் இருந்து காலை 9:15க்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 10:20க்கு குன்னூர் ரயில் நிலையம் வந்து சேரும்.
06142 உதகை ரயில் நிலையத்தில் இருந்து பகல் 12:15க்கு புறப்படும் சிறப்பு ரயில், பிற்பகல் 1:15க்கு குன்னூர் ரயில் நிலையம் வந்து சேரும்.
06140 உதகை ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5:30க்கு புறப்படும் சிறப்பு ரயில், மாலை 6:35க்கு குன்னூர் ரயில் நிலையம் வந்து சேரும்.
மேற்கொண்ட சிறப்பு ரயில்களில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு கட்டாயம். இந்த ரயில்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.
மேற்கொண்ட சிறப்பு ரயில்களின் அட்டவணை பின்வருமாறு ;
மேட்டுப்பாளையம்/குன்னூர் ➡️ உதகை மார்க்கம்.
நிறுத்தம் | 06138 | 06143 | 06141 | 06136 |
மேட்டுப்பாளையம் | -- | -- | | 07:10 (d) |
கல்லார் | -- | -- | | -- |
ஹில்குரோவ் | -- | -- | | -- |
குன்னூர் | 16:00 (d) | 12:35 (d) | 07:45 (d) | 10:30/ 10:40 |
வெலிங்டன் | 16:07/ 16:08 | 12:42/ 12:43 | 07:52/ 07:53 | -- |
அரவங்காடு | 16:17/ 16:18 | 12:52/ 12:53 | 08:04/ 08:05 | 10:59/ 11:00 |
கேத்தி | 16:33/ 16:34 | 13:09/ 13:10 | 08:24/ 08:25 | 11:19/ 11:20 |
லவ்டேல் | 16:49/ 16:50 | 13:26/ 13:27 | 08:41/ 08:42 | 11:39/ 11:40 |
உதகை | 17:10 (a) | 13:45 (a) | 09:00 (a) | 11:55 (a) |
உதகை ➡️ குன்னூர்/மேட்டுப்பாளையம் மார்க்கம்.
நிறுத்தம் | 06140 | 06137 | 06142 | 06139 |
உதகை | 17.30 (d) | 14:00 (d) | 12:15 (d) | 09:15 (d) |
லவ்டேல் | 17:40/ 17:41 | 14:10/ 14:11 | 12:25/ 12:26 | 09:25/ 09:26 |
கேத்தி | 17:52/ 17:53 | 14:24/ 14:25 | 12:37/ 12:38 | 09:38/ 09:39 |
அரவங்காடு | 18:06/ 18:07 | 14:37/ 14:38 | 12:52/ 12:53 | 09:54/ 09:55 |
வெலிங்டன் | 18:14/ 18:15 | -- | 12:59/ 13:00 | 10:01/ 10:02 |
குன்னூர் | 18:35 (a) | 15:05/ 15:15 | 13:15 (a) | 10:20 (a) |
ஹில்குரோவ் | | -- | -- | -- |
கல்லார் | | -- | -- | -- |
மேட்டுப்பாளையம் | | 17:30 (a) | -- | -- |