அதே சமயம் ரயில்களின் அட்டவணையில் பெரிய மாற்றத்தை செய்யவுள்ளதாகவும், இதன் மூலம் பல ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுவதாகவும், இதனால் பயண நேரம் கணிசமாக குறையும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்க காலத்தில், 908 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி வருகிறது. அதாவது, 50 சதவீத ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன. இதில் பல ரயில்களுக்கு புதிய அட்டவணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், ரயில்களின் கால நேரத்தை தெரிவிக்கும், புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும். ரயில் போக்குவரத்து முழுமையான நிலைக்கு திரும்பியதும், புதிய அட்டவணை புத்தகம் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய அட்டவணையில் பல ரயில்களின் நிறுத்தங்கள் குறிக்கப்பட்டுள்ளதாகவும். இதன் காரணமாக பயண நேரம் குறையும் என்றும் ரயில்வே வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புதிய அட்டவணை புத்தகம் வெளியான பின், பல ரயில்களின் பயண நேரத்தில் 30 நிமிடத்திலிருந்து, 6 மணி நேரம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.