கூடுர் - திருப்பதி தடத்தில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக தமிழகத்தில் இருந்து திருப்பதி வழியாக செல்லும் ரயில்களின் சேவையில் டிசம்பர் 26ம் தேதி வரை மாற்றம் - தென் மத்திய ரயில்வே அறிவிப்பு

மாதிரி புகைப்படம்

திருச்சனுர் ரயில் நிலையத்தில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக டிசம்பர் 26ம் தேதி வரை ரயில் சேவையில் கீழ்கண்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென் மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

பகுதி தூரம் மட்டும் செல்லும் ரயில்களின் விவரம்..

1. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 6:25க்கு புறப்படும், 06057 சென்னை - திருப்பதி சிறப்பு ரயில், டிசம்பர் 25ம் தேதி வரை ரேனிகுண்டா ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.

2. திருப்பதியில் இருந்து காலை 10:15க்கு புறப்பட வேண்டிய, வண்டி எண் 06008 திருப்பதி - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், டிசம்பர் 25ம் தேதி வரை ரேனிகுண்டா - சென்னை இடையே மட்டுமே இயங்கும். ரேனிகுண்டா ரயில் நிலையத்தில் இருந்து இந்த ரயில் காலை 10:45க்கு புறப்படும்.

மாற்றுப்பதையில் செல்லும் ரயில்களின் விவரம்.

1. நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2:45க்கு புறப்படும், வண்டி எண் 02659 நாகர்கோவில் ➡️ ஷாலிமர் சிறப்பு ரயில், டிசம்பர் 20ம் தேதி சித்தூர் மற்றும் திருப்பதி வழியாக இயங்காது. இந்த ரயில் காட்பாடியில் இருந்து ரேனிகுண்டாவிற்கு மாற்றுப்பாதையல் செல்லும்.

2  யஷ்வந்த்புரில் இருந்து காலை 8:30க்கு புறப்படும், வண்டி எண் 02890 யஷ்வந்த்புர் ➡️ டாடா நகர் சிறப்பு ரயில், டிசம்பர் 21ம் தேதி திருப்பதி வழியாக இயங்காது. இந்த ரயில் காட்பாடியில் இருந்து ரேனிகுண்டாவிற்கு மாற்றுப்பாதையல் செல்லும்.

3. யஷ்வந்த்புரில் இருந்து காலை 8:30க்கு புறப்படும், வண்டி எண் 02836 யஷ்வந்த்புர் ➡️ ஹதியா சிறப்பு ரயில், டிசம்பர் 25ம் தேதி சித்தூர் மற்றும் திருப்பதி வழியாக இயங்காது. இந்த ரயில் காட்பாடியில் இருந்து ரேனிகுண்டாவிற்கு மாற்றுப்பாதையல் செல்லும்.

4. ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 10:10க்கு புறப்படும், வண்டி எண் 06733 ராமேஸ்வரம் ➡️ ஓகா சிறப்பு ரயில், டிசம்பர் 25ம் தேதி திருப்பதி வழியாக இயங்காது. இந்த ரயில் காட்பாடியில் இருந்து ரேனிகுண்டாவிற்கு மாற்றுப்பாதையல் செல்லும்.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்.

1. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 6:25க்கு புறப்படும், 06057 சென்னை - திருப்பதி சிறப்பு ரயில், டிசம்பர் 26ம் தேதி முழுமையாக ரத்து

2. திருப்பதியில் இருந்து காலை 10:15க்கு புறப்பட வேண்டிய, வண்டி எண் 06008 திருப்பதி - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், டிசம்பர் 26ம் தேதி முழுமையாக ரத்து