சென்னையில் இயக்கப்படும் சிறப்பு புறநகர் ரயில் சேவைகளில் இன்று(டிசம்பர் 23) கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி - தெற்கு ரயில்வே அறிவிப்பு

கடந்த சில மாதங்களாக சென்னை புறநகர் சேவைகளில் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் ஊழியர்களுக்கும் பெண்களுக்கு மட்டும் சிறப்பு புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனோ தொற்றின் பரவல் சென்னையில் குறைந்து வரும் நிலையில், கூட்ட நெரிசல் குறைவாக உள்ள நேரங்களில் அனைத்து பயணிகளும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூட்ட நெரிசல் அதிகமுள்ள நேரங்களான காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை பொதுமக்கள் பயணிக்க அனுமதி இல்லை என்றும். எஞ்சியுள்ள சமயங்களில் பொதுமக்கள் பயணித்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் பயணிகளுக்கு ஒருவழி பயணத்திற்கு மட்டுமே பயணசீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அதே சமயம் இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்கும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், சகுக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.