மதுரை ➡️ தூத்துக்குடி/நாகர்கோவில் இரண்டாவது ரயில் பாதை பணிகள் விரைத்து முடிக்க இலக்கு நிர்ணயம் : மதுரை ➡️ அருப்புக்கோட்டை ➡️ தூத்துக்குடி புதிய பாதை பணி 2025ல் முடிக்க இலக்கு நிர்ணயம்

மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரை ஒற்றை ரயில் பாதை மட்டுமே உள்ளதால், எதிரே வரும் ரயில்களுக்கு வழிவிட மற்றொரு ரயில் காத்திருக்கும் நேரம் அதிகமாக உள்ளதால் ரயில்களின் பயண நேரமும் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், மதுரையிலிருந்து வாஞ்சிமணியாச்சி வழியாக துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்கு 2வது அகல ரயில் பாதை அமைக்கும் பணி ரூ.1200 கோடியில் மூன்றாண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது.

இதில் கடம்பூர் ➡️ கங்கைகொண்டான் மற்றும் மணியாச்சி ➡️ தட்டப்பாறை இடையே பணிகள் முடிக்கப்பட்டுள்ளன..

எஞ்சியுள்ள பகுதிகளுக்கு இலக்கு நிர்ணயம்.


ஜூன் 2020ம் ஆண்டு நிறைவு பெற்றது. (34 கிலோமீட்டர்)

கங்கைகொண்டன் ➡️ வாஞ்சி மணியாச்சி ➡️ கடம்பூர்
வாஞ்சி மணியாச்சி ➡️ தட்டப்பாறை

2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறைவு செய்ய இலக்கு

கங்கைகொண்டன் ➡️ திருநெல்வேலி
தட்டப்பாறை ➡️ மிளவிட்டான்
கடம்பூர் ➡️ கோவில்பட்டி
திருமங்கலம் ➡️ துலுக்கப்பட்டி

2021ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் நிறைவு செய்ய இலக்கு.

திருமங்கலம் ➡️ மதுரை

2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவு செய்ய இலக்கு.

துலுக்கப்பட்டி ➡️ கோவில்பட்டி
திருநெல்வேலி ➡️ நாங்குநேரி

2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறைவு செய்ய இலக்கு.

நாங்குநேரி ➡️ ஆரல்வாய்மொழி

2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவு செய்ய இலக்கு. (21 கிலோமீட்டர்)

ஆரல்வாய்மொழி ➡️ நாகர்கோவில்
தூத்துக்குடி ➡️ மிளவிட்டான்

📌 மதுரை ➡️ அருப்புக்கோட்டை ➡️ தூத்துக்குடி புதிய பாதை திட்டம்.

மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக துாத்துக்குடிக்கு ரூ.2175 கோடியில் அகல ரயில் பாதை அமைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் தற்போது மீளவிட்டான் முதல் மேலமருதுார் வரை பணிகள் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள மீளவிட்டான் - அருப்புக்கோட்டை மற்றும் அருப்புக்கோட்டை - திருப்பரங்குன்றம் இடையில் அகலபாதை அமைக்க 800 எக்டேர் கையகப்படுத்தப்படவுள்ளன. இப்பணிகளை 2025 மார்ச் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.