சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணி வழியாக மும்பை செல்லும் தினசரி சிறப்பு ரயிலின் சேவை 2021 பிப்ரவரி 1ம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய ரயில்வே அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் - மும்பை இடையே இயக்கப்படும் தினசரி சிறப்பு ரயில் ஜனவரி இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

மும்பையில் இருந்து டிசம்பர் 31ம் வரையும், சென்னையில் இருந்து பிப்ரவரி 1ம் தேதி வரையும் இந்த ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை லோகமணிய திலக் முனையத்தில் இருந்து தினசரி மாலை 6:45க்கு புறப்படும், 02163 சென்னை சிறப்பு ரயில், மறுநாள் மாலை 4:20க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும்.

மருமார்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6:25க்கு புறப்படும், 02164 மும்பை லோகமணிய திலக் முனையம் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 3:40க்கு மும்பை சென்றடையும்.

இந்த ரயிலின் அட்டவணை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

The service of Train No.02163 Lokmanya Tilak Terminal – Dr. MGR Chennai Central Daily Special Fare Festival Special Train leaving Lokmanya Tilak Terminal will be extended to run from 01st January, 2021 to 31st January, 2021(31 Services)

02163 சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் அட்டவணை


The service of Train No. 02164 Dr. MGR Chennai Central –Lokmanya Tilak Terminal Daily Special Fare Festival Special Train leaving Dr. MGR Chennai Central will be extended to run from 02nd January, 2021 to 01st February, 2021 (31 Service)

02164 மும்பை லோகமணிய திலக் முனையம் சிறப்பு ரயில் அட்டவணை