இதையடுத்து 20க்கும் மேற்பட்ட பெரிய மேம்பாலங்கள், நூற்றுக்கும் அதிகமான சிறிய பாலங்கள் அமைக்கும் பணிகள் பத்து ஆண்டுகளாக நடைபெற்று முடிவடைந்தது.
இதனை தொடர்ந்து மதுரை 🔄 உசிலம்பட்டி இடையே கடந்த ஜனவரி மாதம் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
ஆண்டிபட்டி ➡️ தேனி இடையே வருகின்ற ஏப்ரல் மாதமும், தேனி ➡️ போடி இடையே வருகின்ற செப்டெம்பர் மாதமும் பணிகள் நிறைவு பெறும் என ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
முதற்கட்ட சோதனை வெற்றி
இந்நிலையில் உசிலம்பட்டி ➡️ ஆண்டிப்பட்டி இடையே நேற்று முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டியிலிருந்து ஆண்டிபட்டி வரை 50 கிலோமீட்டர் வேகத்திலும், ஆண்டிப்பட்டியிலிருந்து உசிலம்பட்டி வரை 90 கிலோமீட்டர் வேகத்திலும் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
டிசம்பர் 16ம் தேதி ஆய்வு
இதனை தொடர்ந்து உசிலம்பட்டி 🔄 ஆண்டிப்பட்டி தடத்தில் டிசம்பர் 16ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அதிவேக ரயில் இயக்கி சோதனை நடத்த உள்ளார்.
டிசம்பர் 16ம் தேதி ஆய்வு பணியை மேற்கொள்ளும் பாதுகாப்பு ஆணையர், ஆண்டிபட்டி ➡️ உசிலம்பட்டி இடையே காலை 10:30 முதல் பிற்பகல் வரை ட்ரால்லி மூலம் சிக்னல் பணிகளை ஆய்வு செய்வார். அதனை தொடர்ந்து மாலை 4மணி அளவில் 120 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேக சோதனை ரயில் இயக்கி ரயில் பாதையின் உறுதித்தன்மை சோதனை செய்வார்.
எதிர்பார்ப்புகள் ஏராளம்.
எஞ்சியுள்ள பணிகள் விரைவில் முடிவடைந்து விரைவில் மதுரை 🔄 போடி தடத்தில் ரயில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போடியில் இருந்து மதுரை வழியாக சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு நேரடி ரயில் சேவை துவக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரால் எதிர்பார்க்கப்படுகிறது.