சென்னை புறநகர் ரயில் சேவைகளில் டிசம்பர் 14ம் தேதி முதல் பெண்களுக்கான நேரக்கட்டுப்பாடுகள் நீக்கம்

வருகின்ற திங்கட்கிழமை முதல் நெரிசல் நேரங்களில் புறநகர் மின்சார ரயில்களில் பெண்கள் பயணம் செய்ய விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் அவர்கள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை உடன் அழைத்து வரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து ரயில் போக்குவரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி பெண்கள் வழக்கம் போல பயணம் செய்ய வழியேற்பட்டுள்ளது.

மேலும் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் மார்கங்களில் திங்கட்கிழமை முதல் மின்சார ரயில் சேவை இயக்கப்படும் எனவும், பயணிகள் பயணத்தின் போது முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.