சென்னை சென்ட்ரலில் இருந்து ரேனிகுண்டவிற்கு அரக்கோணம் வழியாக இன்று(டிச 12) 130 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு அரக்கோணம் வழியாக மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி, சோதனை செய்ய தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

அதன்படி இன்று சனிக்கிழமை பகல் 1 மணிக்கு சென்ட்ரலில் இருந்து 24 பெட்டிகளுடன் புறப்படும் அதிவேக சோதனை ஓட்ட ரயில், பிற்பகல் 2.30 மணிக்கு ரேணிகுண்டா சென்றடையும்.

மறு மார்க்கத்தில் ரேணிகுண்டாவில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

அது சமயம் ரயில் தடத்தின் அருகில் வசிப்போர் ரயில் பாதையை கடக்க வேண்டாம் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.