ஊட்டி ரயில் நிலையத்தில் 100 அடி உயர இரும்பு கம்பத்தில், தேசிய கொடி ஏற்றப்பட்டது

மத்திய அரசு உத்தரவுப்படி, இந்தியா முழுவதும், 78 ரயில்வே ஸ்டேஷன்களில் தேசியகொடி ஏற்றுவதற்காக கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


24 மணி நேரமும் தேசிய கொடி பறக்கும் வகையில், கம்பத்தின் உச்சியில் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஊட்டி ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயிலில், 2 டன் எடையில், 100 அடி உயர இரும்பு கம்பத்தில், 30 அடி நீளம், 20 அடி அகலம், 9.5 கிலோ எடை கொண்ட பாலியஸ்டர் துணியால் தேசிய கொடி தயாரிக்கப்பட்டு நேற்று ஏற்றப்பட்டது.


இதற்கிடையில் ஊட்டி மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கொரோனா தொற்றால் ரயில் இயக்கம், கடந்த, 8 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.