100வது விவசாயிகள் ரயிலை டிசம்பர் 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்

தேவ்லாலி - தனபூர் இடையே முதல் விவசாயிகள் ரயில் 2020 ஆகஸ்ட் 7ம் தேதியன்று கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டது. அதன் சேவை பின்னர் முசாப்பூர் வரை நீட்டிக்கப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து கிடைத்த நல்ல வரவேற்பின் பலனாக வாரம் இரண்டு முறை என இருந்த ரயில் சேவை மூன்று முறையாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் உள்ள சங்கோலாவில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஷாலிமார் வரை செல்லவிருக்கும் இந்த ரயிலை டிசம்பர் 28 அன்று மாலை 4.30 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் துவக்கி வைக்கிறார்.

விவசாயிகள் ரயில் வேளாண் விளைபொருள்களை நாடு முழுவதும் வேகமாக எடுத்துச் செல்வதற்கு பெரிதும் பங்காற்றுகிறது. மேலும் அழுகக்கூடிய பொருள்களின் விநியோகத்தை இது எளிமையாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.