நெதர்லாந்து நாட்டில் மிக பெரிய மெட்ரோ ரயில் விபத்தை தடுத்த திமிங்கல வால் கட்டுமானம் !

பிஜிஹென்சி நகரத்தில் உள்ள  மெட்ரோ ரயில் நிலையத்தில், பல பகுதிகளை இணைக்கும் மெட்ரோ ரயிலின் கடைசி நிறுத்தம் டி அக்கர்ஸ் எனும் இடத்தில் உள்ளது.

அந்த நிறுத்தத்தை நோக்கி வந்து கொண்டிருந்த மெட்ரோ ரயில், நிறுத்தம் வந்தும் வேகத்தை குறைக்க முடியாமல் தடுப்புச்சுவரை இடித்துக் கொண்டு சென்றது.

அந்த ரயில் நிறுத்தத்தின் கீழ் இருக்கும் தண்ணீரில், திமிங்கலத்தின் வால் போன்ற வடிவத்தில் தடுப்புச் சுவரைத் தாண்டி கட்டப்பட்டிருந்தது. வேகமாக வந்த ரயில் அந்த திமிங்கலத்தின் வாலில் இடித்து கீழே விழாமல் நின்றுவிட்டது.

இதனால் ரயிலை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் இதர பணியாளர்கள் உயிர் தப்பினர்.