சென்னை புறநகர் சிறப்பு மின்சார ரயில்களில் யார் யார் பயணிக்கலாம் ?

அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மட்டும் புறநகர் மின்சார ரயிலில் பயணிக்க அண்மையில் அனுமதிக்கப்பட்டனர்.

அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்களும் மின்சார ரயிலில் பயணிக்கலாம்.

இந்நிலையில் தற்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் அத்தியாவசிய பொருள்களை கையாளும் மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைத்து கல்வி நிலையங்களிலும் பணியாற்றுபவர்களும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள், அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத்தில் பணி புரியும் ஊழியர்கள், சரக்கு மற்றும் பயணிகளுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் குழந்தை நலம், மூத்த குடிமக்கள் நலம், சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளில் ஈடுபடும் சமூக சேவை அமைப்புகள் பார்கவுன்சில் உறுப்பினராக இருக்கும் வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு மின்சார ரயிலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை அவசியம்

மேற்கொண்ட அனைவரும் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் இருந்து பெற்ற எழுத்துப்பூர்வ கடிதத்தை வைத்திருப்பதோடு, அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையையும் பயணத்தின் போது காண்பிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
புதியது பழையவை