ஓசூர் - பெங்களூரு இடையே விரைவில் மின்சார ரயில் சேவை

ஓமலூர் ➡️ தர்மபுரி ➡️ ஓசூர் ➡️ பெங்களூரு இடையே மின்சார ரயில் இயக்குவதற்கு ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் கடந்த 2017-18 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

பணிகள் நிறைவு

இந்த மின்மயமாக்கப் பணிகள் தற்போது பெங்களூர் ➡️ ஓசூர் ➡️ பெரியநாகதுணை ரயில் நிலையங்களுக்கு இடையே நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் பெங்களூரு - ஓசூர் இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

விரைவில் மின்சார ரயில்

இந்த ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் "ஓசூர் - பெங்களூரு வழித்தடத்தில் மின்சார ரயில் இயக்குவதற்குத் தேவையான அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு ரயில்வே மண்டலம் மூலமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, விரைவில் ஓசூர் - பெங்களூரு இடையே மின்சார ரயில் இயக்கப்படும்" என்றார்.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பணஸ்வாடி 🔄 ஓசூர் இடையே 2 ஜோடி ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் மின்சார பாதை அமைக்கும் பணி காரணமாக நீண்ட காலமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில்களை மீண்டும் இயகிடவேண்டும் என பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்து காத்து கொண்டு உள்ளனர்.