கொரோனா பாதிப்பு முழுமையாக விலகாத போதும் ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிப்பு !


டெல்லியில் பேசிய ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ், நாடு முழுவதும் இயக்கப்படும் 736 சிறப்பு ரயில்களில், 327 ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் வரை பயணிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மும்பையைத் தவிர மேலும் சில நகரங்களிலும் புறநகர் ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் காத்திருப்போர் பட்டியல் அதிகளவில் சென்றுள்ள ரயில்களின் தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


புதியது பழையவை