பொள்ளாச்சி ➡️ பாலக்காடு வழித்தடத்தில் தண்டவாளத்தை மேம்படுத்தும் பணி : விரைவில் ரயில் போக்குவரத்து துவங்குமா ?

பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கி வந்த ரயில்கள், பொது முடக்கத்தின் போது ரத்து செய்யப்பட்டன.

சில மாதங்களுக்கு பின், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மற்ற வழித்தடங்களில் ரயில்கள் இயங்கத் துவங்கியுள்ளன.

ஆனால், பொள்ளாச்சி வழித்தடத்தில் இது வரை ரயில் இயக்கம் துவங்கவில்லை. பொள்ளாச்சி வழியே கொரோனா பொது முடக்கத்திற்கு முன் இயங்கிய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும், என ரயில்வே ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பயணிகள் சங்கத்தினரும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், இது வரை பொள்ளாச்சி வழித்தடத்தில் ரயில்கள் இயக்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி ரயில் நிலைய யார்டு பகுதி மற்றும் பொள்ளாச்சி ➡️ பாலக்காடு ரயில் வழித்தடத்தில் தண்டவாளத்தை மேம்படுத்தும் விதமாக, நவீன இயந்திரம் கொண்டு ஜல்லிக்கற்கள் 'பேக்கிங்' செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால், இந்த தடத்தில் விரைவில் ரயில் போக்குவரத்து துவங்கப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

மாதிரி புகைப்படம்