கபூர்தாலா நவீன ரயில் பெட்டி தொழிற்சாலையில் உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரிப்பு - ரயில்வே அமைச்சர் தகவல்

மத்திய ரயில்வே அமைச்சர் தனது சமூக வலைதளத்தில் "மேக் இன் இந்தியா திட்டம் மூலம் கபூர்தாலா ரயில் பெட்டி தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெற்று வருவதாகவும். தற்போது கொரோனோ பொது முடக்க காலத்திலும் அக்டோபர் மாதம் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது" என பதிவிட்டுள்ளார்.

அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இதே காலகட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3.08 பெட்டிகள் தயாரிக்கப்பட்டது. அது தற்போது நாள் ஒன்றுக்கு 5.88 பெட்டிகளாக உயர்ந்துள்ளது. 

இதன் மூலம் இந்த தொழிற்சாலை தனது உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.