பயணிகள் வரவேற்பை பெறாத இரண்டு ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

நாடு முழுவதும் பல்வேறு வழிதடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே துறையினர் இயக்கி வருகின்றனர். மேலும் பயணிகள் அதிகம் உபயோகிக்கும் ரயில்களின் வழித்தடத்தில் கூடுதல் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாடு முழுவதும் பயணிகள் வரவேற்ப்பை பெறாத ரயில்களை ரயில்வே துறையினர் ரத்து செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் கோயம்புத்தூர் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

1. 06027/06028 சென்னை சென்ட்ரல் 🔄 கோயம்புத்தூர் சதாப்தி சிறப்பு ரயில், டிசம்பர் 2ம் தேதி முதல் ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயிலின் கடைசி சேவை நவ.30ம் தேதி.

2. 02027/02028 பெங்களூர் 🔄 சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், நவம்பர் 21ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலின் கடைசி சேவை நவ.20ம் தேதி.