தஞ்சை - மயிலாடுதுறை தடத்தில் மின்சார என்ஜின்கள் மூலம் ரயில் இயக்க அனுமதி : சோழன் விரைவு ரயில் இன்று முழுமையாக மின்சார என்ஜின் கொண்டு இயக்கப்படுகிறது.



மின்சார பாதையாக மாற்றப்பட்ட மயிலாடுதுறை - தஞ்சை தடத்தில் கடந்த 11ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அன்றைய தினம் மின்சார இன்ஜின் இயக்கி அதிவேக சோதனையும் நடைப்பெற்றது.

இதனை தொடர்ந்து நேற்று தஞ்சை - மயிலாடுதுறை தடத்தில் மின்சார என்ஜின் கொண்டு பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னை எழும்பூர் 🔄 திருச்சி சோழன் விரைவு ரயில் இருமார்கத்திலும் மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்பட்டன.

மேலும் இந்த தடத்தில் பின்வரும் ரயில்கள் மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்படுகிறது.

1. 02083/02084 மயிலாடுதுறை 🔄 கோயம்புத்தூர் சிறப்பு ரயில், முழுமையாக மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்படவுள்ளது.

2. 06232/06231 மயிலாடுதுறை 🔄 மைசூர் சிறப்பு ரயில், மயிலாடுதுறை - ஈரோடு தடத்தில் மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்படவுள்ளது.

3. 08495/08496 ராமேஸ்வரம் 🔄 புவனேஸ்வர் சிறப்பு ரயில், எழும்பூர் - திருச்சி இடையே மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்படவுள்ளது.

4. 05119/05120 ராமேஸ்வரம் 🔄 வாரணாசி சிறப்பு ரயில், எழும்பூர் - திருச்சி இடையே மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்படவுள்ளது.

மேற்கொண்ட சிறப்பு ரயில்கள் தவிர வழக்கம் போல இயங்கி வந்த பின்வரும் ரயில்களும் மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்படவுள்ளது.(முழுமையாக ரயில் சேவைகள் மீண்டும் துவங்கும் போது)

1. 16191/16192 தாம்பரம் 🔄 நாகர்கோவில் அந்தியோதயா ரயில், முழுமையாக மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்படவுள்ளது.

2. 16865/16866 எழும்பூர் 🔄 தஞ்சாவூர் உழவன் ரயில், முழுமையாக மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்படவுள்ளது.

3. 16851/16852 எழும்பூர் 🔄 ராமேஸ்வரம் ரயில், எழும்பூர் 🔄 திருச்சி இடையே மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்படவுள்ளது.

4. 22623/22624 எழும்பூர் 🔄 மதுரை(வாரத்திற்கு இருமுறை) ரயில், முழுமையாக மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்படவுள்ளது.

5. 16105/16106 எழும்பூர் 🔄 திருச்செந்தூர் ரயில், எழும்பூர் 🔄 நெல்லை இடையே மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்படவுள்ளது.

6. 56113/56114 மயிலாடுதுறை 🔄 திருச்சி பயணிகள் ரயில், முழுமையாக மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்படவுள்ளது.

7. 56115/56116 மயிலாடுதுறை 🔄 தஞ்சாவூர் பயணிகள் ரயில், முழுமையாக மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்படவுள்ளது.

8. 56822/56823 மயிலாடுதுறை 🔄 திருநெல்வேலி பயணிகள் ரயில், முழுமையாக மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்படவுள்ளது.
புகைப்படம் - சஞ்சீவ் ராஜ்.
மின்சார இன்ஜின் கொண்டு இயக்கப்படும், சோழன் விரைவு ரயில்