வெளியூர் செல்லும் விரைவு ரயில் டிக்கெட் இருந்தால் சென்னை புறநகர் சிறப்பு ரயில்களில் பயணிக்கலாம் : தெற்கு ரயில்வே

அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட சில துறை பணியாளர்கள் தற்போது சென்னை புறநகர் சிறப்பு ரயில்களில் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

இதற்காக 154 புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வெளியூர் செல்லும் விரைவு ரயில்களின் பயணசீட்டு இருந்தால் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் சென்னை விமான நிலையம் செல்லும் பயணிகளும் புறநகர் ரயில் சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதற்காக 50 புறநகர் ரயில் சேவைகளை கூடுதலாக இயக்கப்படவுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
புதியது பழையவை