தூத்துக்குடி 🔄 மைசூர் சிறப்பு ரயில் கடம்பூர் ரயில் நிலையத்தில் நிற்காது : தெற்கு ரயில்வே அறிவிப்பு


துாத்துக்குடியில் இருந்து, கர்நாடகா மாநிலம் மைசூருக்கு, தினமும் மாலை, 4:25 மணிக்கும், மைசூரில் இருந்து துாத்துக்குடிக்கு, தினமும், மாலை, 6:20க்கும் விரைவி சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில், கடம்பூரிலும் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது, இந்த ரயில் இரு வழிகளிலும், கடம்பூரில் நிற்காது என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இந்த ரயில், ஓசூர், பாலக்கோடு, தர்மபுரி, சேலம், ஈரோடு, புகலூர், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
Image Credits - Dinakaran