பெங்களூர் யஸ்வந்த்பூரில் இருந்து பீகார் மாநிலம் ஜெய்நகருக்கு ஜோலார்பேட்டை, ரேனிகுண்ட வழியாக நவ. 7ம் தேதி சிறப்பு ரயில்.


கர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்துள்ள யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பீகார் மாநிலம் மதுபணியில் அமைந்துள்ள ஜெய்நகர் ரயில் நிலையத்திற்கு பண்டிகைகால சிறப்பு ரயிலை தென்மேற்கு ரயில்வே இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நவம்பர் 7ம் தேதி காலை 11மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், பிற்பகல் 2மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்து, பிற்பகல் 2:05க்கு புறப்பட்டு ரேனிகுண்ட, விஜயவாடா, புவனேஸ்வர், கட்டக், அசன்சால் வழியாக மூன்றாம் நாள் காலை 11 மணிக்கு ஜெய் நகர் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த ரயிலில் மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி மற்றும் அமரும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.