மும்பை 🔄 சென்னை இடையே நவ.7ம் தேதி முதல் சோலாப்பூர், வாடி, குண்டக்கல், ரேனிகுண்ட, அரக்கோணம் வழியாக சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

மும்பையில் இருந்து தமிழகத்திற்கு ரயில்கள் இயக்க பல்வேறு பயணிகள் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் மும்பையில் இருந்து சென்னைக்கு பண்டிகைகால சிறப்பு ரயில்கள் இயக்கவுள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரல் 🔄 மும்பை இடையே நவம்பர் 7ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு :

மும்பை லோகமணிய திலக் முனையத்தில் இருந்து நவ.7ம் தேதி முதல் மாலை 6:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 4:20க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும்.

மறுமார்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.8ம் தேதி முதல் மாலை 6:15க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 4மணிக்கு மும்பை லோகமணிய திலக் முனையம் சென்றடையும்.

இந்த ரயில் தானே, கல்யாண், புனே, சோலாப்பூர், கலபுர்கி, வாடி, யாட்கிர், சைடாபூர், ராய்ச்சூர், மந்த்ராலயம் ரோடு, அடோனி, குண்டக்கல், கூட்டி, தடிப்பட்ரி, ஏராகுண்டல, கடப்பா, ரசம்பேட்டை, ரேனிகுண்ட மற்றும் அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை மார்க்கமாக பயணிக்கும் போது பெரம்பூர் ரயில் நிலையத்திலும் கூடுதலாக நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நவ.5ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும் என மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


02163 / 02164 Lokmanya Tilak – Dr. MGR Chennai Central – Lokmanya Tilak Daily Superfast festival Special Trains 

Train No. 02163 Lokmanya Tilak – Dr. MGR Chennai Central Daily superfast festival special train will leave Lokmanya Tilak at 18.45 hrs from 07th November, 2020 to 30th November, 2020 (24 services) and reach Dr. MGR Chennai Central 16.20 hrs, the next day.

In return direction Train No. 02164 Dr. MGR Chennai Central – Lokmanya Daily superfast festival Special train will leave Dr. MGR Chennai Central at 18.15 hrs from 08th November, 2020 to 01st December, 2020 and reach Lokmanya Tilak at 16.00 hrs the next day.

Stoppages:  Thane, Kalyan, Pune, Solapur, Kalaburgi, Wadi, Yadgir, Saidapur, Raichur, Mantralayam Road, Adoni, Guntakal, Gooty, Tadipatri, Yeraguntla, Cuddapah, Razampeta, Renigunta and Arakkonam. 

Train No. 02163 Lokmanya Tilak – Dr. MGR Chennai Central Daily superfast festival special train will also stop at Perambur.

CompositionOne AC 2-Tier Coach, Four AC 3-Tier Coaches, Eleven Sleeper Class Coaches, Four General Second Class Coaches and Two Luggage cum Brake Vans,