கோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு

மும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு ரயில் இயக்க மும்பை தமிழ் ரயில் பயணிகள் சங்கத்தினர் உள்பட தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகள்கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் மும்பையில் இருந்து டிசம்பர் 1ம் தேதி முதல் கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

"மும்பை லோகமாணிய திலக் முனையத்தில் இருந்து டிச.1ம் தேதி முதல்.. கோயம்புத்தூரில் இருந்து டிச.3ம் தேதி முதல்"

மும்பையில் இருந்து இரவு 10:35க்கு புறப்படும் சிறப்பு ரயில், இரண்டாம் நாள் காலை 6:50க்கு கோவை வந்து சேரும்.

மறுமார்கத்தில் கோவையில் இருந்து காலை 8:55க்கு புறப்படும் சிறப்பு ரயில், இரண்டாம் நாள் பகல் 1:45க்கு மும்பை சென்றடையும்.

இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர் சந்திப்பு உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.