ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை

தீபாவளிப் பண்டிகை பொதுமக்கள் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு வசதியாக ரயில்வேத்துறை சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

இந்நிலையில், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்வ தடை விதிக்கப்பட்டுள்ளதை தற்போது ரயில்வே நிர்வாகம் சுட்டிக் காட்டியுள்ளது.

அதன்படி ரயில்களில் தீப்பற்றக் கூடிய பொருட்களை எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் மூலம் ரயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.