மயிலாடுதுறை ➡️ மைசூர் சிறப்பு ரயிலின் அட்டவணை நவ. 3ம் தேதி முதல் மாற்றம் !

மயிலாடுதுறை 🔄 மைசூர் இடையே திருச்சி, ஈரோடு, சேலம், தர்மபுரி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு ரயிலின் அட்டவணையில் நவ. 3ம் தேதி முதல் சிறிய மாற்றம் உள்ளதாக தென் மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

நவ. 3ம் தேதி முதல், பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திற்கு அதிகாலை 4:53க்கு வந்து 4:55க்கு புறப்படும்.

மேலும் பெங்களூர் ரயில் நிலையத்திற்கு 5:25க்கு வந்து 5:55க்கும், கெங்கேரி ரயில் நிலையத்திற்கு 6:14க்கு வந்து 6:15க்கும், மந்தியா ரயில் நிலையத்திற்கு 7:19க்கு வந்து 7:21க்கும் புறப்பட்டு செல்லும்.

அதே போல் மைசூர் ரயில் நிலையத்திற்கு காலை 8:30க்கு பதிலாக 8:40க்கும் வந்து சேரும் என தென் மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. 

Timings of following festival special trains will be revised at some stations due to change of traction as detailed below:-

- Train No. 06231 Mayiladuturai – Mysuru Express Special will arrive/depart with revised timings at Bengaluru Cantonment – 04:53/04:55 hrs, KSR Bengaluru – 05:25/05:55 hrs, Kengeri – 06:14/06:15 hrs, Mandya – 07:19/07:21 hrs and arrive Mysuru at 08:40 hrs instead of 08:30 hrs with effect commencing journey from Mayiladuturai from 03.11.2020. 

-  There will be no change in timings of above trains at their other stoppages

புதியது பழையவை