நவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்பட்டு இடையே அமைக்கப்பட்டு வரும் 3வது மற்றும் 4வது ரயில் பாதை தொடர்பான பொறியியல் பணி காரணமாக நவ 23ம் தேதி முதல் நவ 28ம் தேதி வரை(26 மற்றும் 27ம் தேதி தவிர) 4 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

1. நவ 24ம் தேதி அதிகாலை 3:35க்கு பெரம்பூர் வழியாக செல்லும், வண்டி எண் 02642 ஷாலிமர் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் ரேனிகுண்ட, திருத்தணி, காட்பாடி வழியாக செல்லும். இந்த ரயில் பெரம்பூர் ரயில் வழியாக இயங்காது. அதற்கு பதிலாக திருத்தணி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

2. நவ 25 மற்றும் 28ம் தேதி பகல் 1:30க்கு சென்னை சென்ட்ரல் வழியாக செல்லும், வண்டி எண் 02296 தனப்பூர் - பெங்களூர் சிறப்பு ரயில் ரேனிகுண்ட, திருத்தணி, காட்பாடி வழியாக செல்லும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் வழியாக இயங்காது. அதற்கு பதிலாக திருத்தணி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

3. நவ 25ம் தேதி பிற்பகல் 2:45க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும், வண்டி எண் 02670 சாப்ரா - சென்னை சிறப்பு ரயில் ரேனிகுண்ட, திருத்தணி வழியாக வந்து சேரும். 

4. நவ 28ம் தேதி பிற்பகல் 3:15க்கு சென்னை சென்ட்ரல் வழியாக செல்லும், வண்டி எண் 02296 பெங்களூர் - தனப்பூர் சிறப்பு ரயில் காட்பாடி, திருத்தணி, ரேனிகுண்ட வழியாக செல்லும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் வழியாக இயங்காது. அதற்கு பதிலாக திருத்தணி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை