கன்னியாகுமரி 🔄 டெல்லி இடையே நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை வழியாக நவ.25ம் தேதி முதல் சிறப்பு ரயில் : இந்த சிறப்பு ரயில் வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே

ரயில் பயணிகளின் பயணத்தேவையை கருத்தில் கொண்டு அவ்வப்போது சிறப்பு ரயில்களை இந்த கொரோனோ காலத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ரயில்வே துறையினர் இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில் நவ. 25ம் தேதி முதல் கன்னியாகுமரி 🔄 டெல்லி இடையே வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

06011 கன்னியாகுமரி ➡️ டெல்லி நிஜாமுதின் வாரம் இருமுறை சிறப்பு ரயில்.(நவ 25ம் தேதி முதல் - புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்)

கன்னியாகுமரியில் இருந்து இரவு 7:05க்கு புறப்படும் சிறப்பு ரயில், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6:35க்கு டெல்லி நிஜாமுதின் ரயில் நிலையம் சென்றடையும்.

06012 டெல்லி நிஜாமுதின் ➡️ கன்னியாகுமரி வாரம் இருமுறை சிறப்பு ரயில்.(நவ 28ம் தேதி முதல் - சனி மற்றும் திங்கட்கிழமைகளில்)

டெல்லியில் இருந்து அதிகாலை 5:20க்கு புறப்படும் சிறப்பு ரயில், திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் அதிகாலை 4:45க்கு கன்னியாகுமரி வந்து சேரும்.

இந்த ரயில் நாகர்கோவில், திருநெல்வேலி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், கூடுர், விஜயவாடா, பல்ஹர்ஷா, நாக்பூர், பெதுல், இடர்சி, போபால், ஜான்சி மற்றும் ஆக்ரா கண்டோன்மெண்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

வண்டி எண். 06011 கன்னியாகுமரி ➡️ டெல்லி நிஜாமுதின் சிறப்பு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நவ.19ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Train No.06011 / 06012 Kanniyakumari – Hazrat Nizamuddin – Kanniyakumari Bi-Weekly Special Trains

With the composition of Two AC 2-Tier Coaches, Three AC 3-Tier Coaches, Eight Sleeper Class Coaches, Four General Second Class Coaches and Two Luggage cum Brake Vans, Train No. 06011 Kanniyakumari – Hazrat Nizamuddin Bi-Weekly special train will leave Kanniyakumari on Wednesdays and Fridays at 19.05 hrs and reach Hazrat Nizamuddin at 18.35 hrs on Fridays and Sundays. The first service from Kanniyakumari will be on 25th November, 2020 until further advice.

In return direction, Train No. 06012 Hazrat Nizamuddin – Kanniyakumari Bi-Weekly special train will leave Hazrat Nizamuddin on Saturdays and Mondays at 05.20 hrs and reach Kanniyakumari at 04.45 hrs on Mondays and Wednesdays. The first service from Hazrat Nizamuddin will be on 28th November, 2020 until further advice.

Train No. 06011 Kanniyakumari – Hazrat Nizamuddin Bi-Weekly special train will also stop at Kovilpatti

Stoppages: Nagarcoil, Tirunelveli, Satur, Virudhunagar, Madurai, Dindugal, Tiruchchirappalli, Vridhachallam, Villupuram, Chengalpattu, Tambaram, Chennai Egmore, Gudur, Vijayawada, Balharshah, Nagpur, Betul, Itarsi, Bhopal, Jhansi and Agra Cantt.