சென்னை சென்ட்ரல் 🔄 புது டெல்லி இடையே நவ. 24ம் தேதி முதல் தினசரி சிறப்பு ரயில் : அதிநவீன எல்.எச்.பி பெட்டிகள் கொண்டு இயக்கம்.

சென்னை சென்ட்ரல் 🔄 புது டெல்லி இடையே தற்போது ஜி. டி விரைவு ரயில் சிறப்பு ரயில் ஆக இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் 🔄 புது டெல்லி இடையே இயங்கி வந்த மற்றொரு ரயில் ஆன தமிழ்நாடு அதிவேக ரயில் சிறப்பு ரயில் ஆக இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

02621 சென்னை சென்ட்ரல் ➡️ புது டெல்லி.

சென்னையில் இருந்து இரவு 10மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மூன்றாம் நாள் காலை 7:40க்கு புது டெல்லி சென்றடையும். இந்த ரயிலின் முதல் சேவை நவ.24ம் தேதி துவங்குகிறது. இதற்கான முன்பதிவு நவ.19ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும்.

02622 புது டெல்லி ➡️ சென்னை சென்ட்ரல்.

டெல்லியில் இருந்து இரவு 9:05க்கு புறப்படும் சிறப்பு ரயில், மூன்றாம் நாள் காலை 6:15க்கு சென்னை வந்து சேரும். இந்த ரயிலின் முதல் சேவை நவ 26ம் தேதி துவங்குகிறது. இதற்கான முன்பதிவு நவ.19ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும்.

இந்த ரயில் விஜயவாடா, வாரங்கல், பல்ஹர்ஷா, நாக்பூர், இடர்சி, போபால், ஜான்சி, குவாலியர் மற்றும் ஆக்ரா கண்டோன்மெண்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கூடுதல் சிறப்பாக இந்த ரயில் அதிநவீன எல்.எச்.பி பெட்டிகள் கொண்டு இயக்கப்படவுள்ளது. இந்த தகவல் ரயில் பயணிகள், ரயில் ஆர்வலர்கள் மற்றும் ரயில் விரும்பிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Train No.02621 / 02622 Dr. MGR Chennai Central – New Delhi – Dr. MGR Chennai Central Daily Special Trains.

With the composition of One AC First Class cum 2-Tier Coach, Two AC 2-Tier Coaches, Three AC 3-Tier Coaches, Eleven Sleeper Class Coaches, Two General Second Class Coaches and Two Luggage cum Brake Vans, Train No. 02621 Dr. MGR Chennai Central – New Delhi Daily special train will leave Dr. MGR Chennai Central at 22.00 hrs and reach New Delhi 07.40 hrs, the third day. The first service from Dr. MGR Chennai Central will be on 24th November, 2020 until further advice.

In return direction Train No. 02622 New Delhi – Dr. MGR Chennai Central Daily Special train will leave New Delhi at 21.05 hrs and reach Dr. MGR Chennai Central at 06.15 hrs the third day. The first service from New Delhi will be on 26th November, 2020 until further advice.

Train No. 02621 Dr. MGR Chennai Central – New Delhi Daily special train will also stop at Hazrat Nizamuddin.

Stoppages:  Vijayawada, Warangal, Balharshah, Nagpur, Itarsi, Bhopal, Jhansi, Gwalior and Agra Cantt.