நிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

நவ 24ம் தேதி.

1. 06865/06866 சென்னை எழும்பூர் 🔄 தஞ்சாவூர் சிறப்பு ரயில், நவம்பர் 24ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

2. மைசூரில் இருந்து நவ.24ம் தேதி புறப்படும், 06232 மயிலாடுதுறை சிறப்பு ரயில், திருச்சி ➡️ மயிலாடுதுறை இடையே ரத்து செய்யப்படுகிறது. அதாவது மைசூர் ➡️ திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

3. எர்ணாகுளத்தில் இருந்து நவ.24ம் தேதி புறப்படும், 06188 காரைக்கால் சிறப்பு ரயில், திருச்சி ➡️ காரைக்கால் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதாவது எர்ணாகுளம் ➡️ திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

4. புவனேஸ்வரில் இருந்து நவ.24ம் தேதி புறப்படும், 02898 புதுச்சேரி சிறப்பு ரயில், சென்னை எழும்பூர் ➡️ புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகிறது. அதாவது புவனேஸ்வர் ➡️ சென்னை எழும்பூர் இடையே மட்டும் இயங்கும்.

நவ. 25ம் தேதி

1. 06795/06796 சென்னை எழும்பூர் 🔄 திருச்சி சிறப்பு ரயில், நவ.25ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

2. 06865/06866 சென்னை எழும்பூர் 🔄 தஞ்சாவூர் சிறப்பு ரயில், நவம்பர் 25ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

3. மயிலாடுதுறையில் இருந்து நவ.25ம் தேதி புறப்படும், 06231 மைசூர் சிறப்பு ரயில், மயிலாடுதுறை ➡️ திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. அதாவது திருச்சி ➡️ மைசூர் இடையே மட்டும் இயங்கும்.

4. காரைக்காலில் இருந்து நவ.25ம் தேதி புறப்படும், 06187 எர்ணாகுளம் சிறப்பு ரயில், காரைக்கால் ➡️ திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. அதாவது திருச்சி ➡️ எர்ணாகுளம் இடையே மட்டும் இயங்கும்.

5. புதுச்சேரியில் இருந்து நவ.25ம் தேதி புறப்படும், 02897 புவனேஸ்வர் சிறப்பு ரயில், புதுச்சேரி ➡️ சென்னை எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதாவது சென்னை எழும்பூர் ➡️ புவனேஸ்வர் இடையே மட்டும் இயங்கும்.

6. புதுச்சேரியில் இருந்து நவ.25ம் தேதி புறப்படும், 02868 ஹௌரா சிறப்பு ரயில், புதுச்சேரி ➡️ விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதாவது விழுப்புரம் ➡️ ஹௌரா இடையே மட்டும் இயங்கும்.

7. கோவையில் இருந்து நவ.25ம் தேதி புறப்படும், 02084 மயிலாடுதுறை சிறப்பு ரயில், திருச்சி ➡️ மயிலாடுதுறை இடையே ரத்து செய்யப்படுகிறது. அதாவது கோயம்புத்தூர் ➡️ திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

8. மயிலாடுதுறையில் இருந்து நவ.25ம் தேதி புறப்படும், 02083 கோயம்புத்தூர் சிறப்பு ரயில், மயிலாடுதுறை ➡️ திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. அதாவது திருச்சி ➡️ கோயம்புத்தூர் இடையே மட்டும் இயங்கும்.

பயண கட்டணம் திருப்பி அளிக்கப்படும் - தெற்கு ரயில்வே.

முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களுக்கு முழு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனவும், இணைய வழியாக முன்பதிவு செய்தவர்களுக்கு பயணசீட்டுகள் தானாக ரத்து செய்யப்பட்டு, கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும், முன்பதிவு மையங்கள் மூலம் முன்பதிவு செய்தவர்கள் பயண தேதியில் இருந்து 15 நாட்களுக்குள்(வழக்கமாக 3 நாட்கள்) கட்டணத்தை திரும்ப பெறலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதே சமயம் பகுதி தூரம் மட்டும் செல்லும் ரயில்களுக்கு தற்போது பின்பற்றப்படும் விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

Change in pattern of Train Services

 

Owing to onset of Cyclone Nivar, the following trains are Fully Cancelled/Partially cancelled:

The following Trains are Fully Cancelled on 24th November, 2020:

1.      Train No. 06865/06866 Chennai Egmore - Thanjavur – Chennai Egmore Special is fully cancelled on 24th and 25th November, 2020

Partial Cancellation of Trains Commencing Journey on  24th November 2020:

1.      Train No. 06232 Mysuru - Mayiladuturai  Special is partially cancelled between Tiruchchirappalli and Mayiladuturai

2.      Train No.06188 Ernakulam – Karaikal Special partially cancelled between Tiruchchirappalli and Karaikal

3.      Train No. 02898 Bhubaneswar - Puducherry special partially cancelled between Chennai Egmore and Puducherry

The following Train is Fully Cancelled on 25th November, 2020:

1.      Train No. 06795/06796 Chennai Egmore  – Tiruchchirappalli  – Chennai Egmore Special is fully cancelled on 25th  November, 2020

2.      Train No. 06865/06866 Chennai Egmore - Thanjavur – Chennai Egmore Special is fully cancelled on 25th November, 2020

Partial Cancellation of Trains Commencing Journey on  25th November 2020:

1.      Train No.06231 Mayiladuturai – Mysuru Special is partially cancelled between Mayiladuturai and Tiruchchirappalli

2.      Train No. 06187 Karaikal – Ernakulam  Special partially cancelled between Karaikal and Tiruchchirappalli

3.      Train No. 02084 Coimbatore – Mayiladuturai Jan Shatabdi Special partially cancelled between Tiruchchirappalli and Mayiladuturai

4.      Train No. 02083 Mayiladuturai – Coimbatore Jan Shatabdi Special partially cancelled between Mayiladuturai and Tiruchchirappalli

5.      Train No. 02897 Puducherry – Bhubaneswar Special partially cancelled between Puducherry and Chenni Egmore

6.      Train No.02868 Puducherry – Howrah Superfast Special partially cancelled between Puducherry and Villuppuram

Full refund shall be granted for trains fully cancelled on this account. For e-ticket holders, automatic refund shall be granted. For tickets booked in railway counters, passengers shall take refund from the railway counter on surrendering of tickets within 15 days of the scheduled departure of the train as against the regular norm of 3 days. Time limit has been relaxed in this regard.

Existing refund rules will prevail for trains which are partially cancelled.