நாகர்கோவிலில் இருந்து கொல்கத்தா ஷாலிமார் ரயில் நிலையத்திற்கு நவ.22ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் : திருவனந்தபுரம், பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருப்பதி வழியாக பயணிக்கும்.

நாகர்கோவில் 🔄 ஷாலிமார் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

"நாகர்கோவிலில் இருந்து நவ.22ம் தேதி முதல், ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து நவ.25ம் தேதி முதல்"

நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், செவ்வாய்க்கிழமைகளில் பகல் 11:55க்கு ஷாலிமார் ரயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்கத்தில் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமைகளில் இரவு 11:50க்கு புறப்படும் சிறப்பு ரயில், வெள்ளிக்கிழமைகளில் இரவு 9:35க்கு நாகர்கோவில் வந்து சேரும்.

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் கேரளா வழியாக பயணித்து கோவை, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக பயணிக்கும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை(நவ.18) காலை 8மணி முதல் நடைபெறும்.

T.No.02659/02660 Nagercoil – Shalimar – Nagercoil Fully Reserved Weekly Specials

Train No.02659 Nagercoil – Shalimar Weekly Special will leave Nagercoil at 14.45 hrs on Sundays to reach Shalimar at 11.55 hrs on Tuesdays. In the return direction, Train No.02660 Shalimar – Nagercoil Weekly Special will leave Shalimar at 23.50 hrs on Wednesdays to reach Nagercoil at 21.35 hrs on Fridays.

The first Service of Train No.02659 from Nagercoil will be on and from 22nd November 2020 until further advice.

The first Service of Train No.02660 from Shalimar will be on and from 25th November 2020 until further advice.

Stoppages will be Thiruvananthapuram, Varkala, Kollam, Kayankulam, Chengannur, Tiruvalla, Kottayam, Ernakulam Town, Aluva, Thrissur, Palakkad, Coimbatore, Erode, Salem, Jolarpettai, Katpadi, Chittor, Tirupati, Renigunta, Nellore, Ongole, Chirala, Tenali, Vijayawada, Eluru, Rajamundry, Samalkot, Visakhapatnam, Vizianagaram, Srikakulam Road, Palasa, Berhampur, Balugan, Khurdha Road, Bhubaneswar, Cuttack, Jajpur K Road, Bhadrak, Balasore, Kharagpur and Santragachi in both directions.

With a composition of One 2-Tier AC Coach, Five 3-Tier AC Coaches, Ten Sleeper Class Coaches, Four General Second Class Coaches, and two Luggage cum Brake Vans.