தமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் !

கொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பொது முடக்கத்தில் அளிக்கப்பட்டு வரும் தளர்வு காரணமாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக ரயில்வே வாரியத்தின் அனுமதியை தெற்கு ரயில்வே கோரியுள்ளது. ரயில்வே வாரியம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்த ரயில்கள் வருகின்ற டிசம்பர் 1ம் தேதி முதல் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே பரிந்துரை செய்த ரயில்களின் விவரம் பின்வருமாறு ;

1. 16127/16128 சென்னை எழும்பூர் 🔄 குருவாயூர்
2. 16851/16852 சென்னை எழும்பூர் 🔄 ராமேஸ்வரம்
3. 16105/16106 சென்னை எழும்பூர் 🔄 திருச்செந்தூர்
4. 12667/12668 சென்னை எழும்பூர் 🔄 நாகர்கோவில்
5. 16175/16176 சென்னை எழும்பூர் 🔄 காரைக்கால்
6. 12695/12696 சென்னை சென்ட்ரல் 🔄 திருவனந்தபுரம்
7. 12685/12686 சென்னை சென்ட்ரல் 🔄 மங்களூர்
8. 22651/22652 சென்னை சென்ட்ரல் 🔄 பாலக்காடு
9. 22668/22667 கோயம்புத்தூர் 🔄 நாகர்கோவில்
10. 12603/12604 சென்னை சென்ட்ரல் 🔄 ஹைதராபாத்
11. 16179/16180 சென்னை எழும்பூர் 🔄 மன்னார்குடி
12. 16729/16730 மதுரை 🔄 புணலூர்(முன்பு 56700/56701 பயணிகள் ரயில் ஆக இயங்கியது. தற்போது விரைவு ரயில் ஆக)
13. 16321/16322 நாகர்கோவில் 🔄 கோயம்புத்தூர்(முன்பு 56319/56320 பயணிகள் ரயில் ஆக இயங்கியது. தற்போது விரைவு ரயில் ஆக)

இது தவிர தற்போது சிறப்பு ரயில் ஆக இயங்கி வரும் கன்னியாகுமரி 🔄 ஹௌரா, மதுரை 🔄 பிகானீர் மற்றும் திருவனந்தபுரம் 🔄 கோர்பா ஆகிய ரயில்கள் மீண்டும் நிரந்தர எண் கொண்டு இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.