மின்மயமாக்கபட்ட தஞ்சை - மயிலாடுதுறை தடத்தில் நாளை(நவ. 11) ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், எரிபொருள் பயன்பாடு மற்றும் இயக்க செலவினத்தைக் குறைக்கவும் ரயில் தடங்களை மின்மயமாக்கும் பணிகள் நாடு முழுவதும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை - தஞ்சாவூா் இடையே 70 கி.மீ. தூரத்துக்கு ரூ. 320 கோடி மதிப்பில் மின்மயமாக்கல் பணி நடைபெற்று வந்தது.

இந்தப் பணிகள் தற்போது நிறைவுற்றது. இதனை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் நாளை(புதன்கிழமை) காலை 9மணி முதல் பிற்பகல் 1மணி வரை தஞ்சை ➡️ மயிலாடுதுறை இடையே ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

மேலும் மாலை 3மணி முதல் மாலை 4மணிக்குள் மயிலாடுதுறை ➡️ தஞ்சை இடையே மின்சார ரயில் இயக்கி சோதனை செய்யவுள்ளார்.

அது சமயம் தண்டவாளத்தின் அருகில் வசிப்போர் தடத்தை கடக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.