நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளையொட்டி ரயில் பாதைகள் அமைக்க இந்தியன் ரெயில்வே திட்டம்

நெடுஞ்சாலைகளுடன் மேலும் சில முக்கிய சாலைகளை ஒட்டி ரயில் திட்டம் அமைக்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கியமான நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த நெடுஞ்சாலைகளை ஒட்டி ரயில் பாதைகளை அமைத்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதன்படி டெல்லி- அமிருதசரஸ்- கத்ரா மற்றும் சென்னை- பெங்களூர் ஆகிய நெடுஞ்சாலைகளையொட்டி ரயில் பாதைகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் மற்றும் சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை துறை அமைச்சகம் ஆலோசனை கூட்டங்களை நடத்தின.

அதில் இதுபோன்ற ரயில் பாதைகளை எப்படி அமைப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேற்கண்ட நெடுஞ்சாலைகளுடன் மேலும் சில முக்கிய சாலைகளை ஒட்டி ரயில் திட்டம் அமைக்கப்படுகிறது.

மேலும் பசுமை வழிச்சாலைகளில் ரயில் பாதைகள் அமைக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளனர். பசுமை வழிச்சாலைகளில் நிலங்களை கையகப்படுத்தினால் அரசுக்கு பணம் மிச்சமாகும். 

முதற்கட்டமாக டெல்லி- அமிருதசரஸ்- கத்ரா இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு ரூ 25 ஆயிரம் கோடியில் கடந்த ஜூன் மாதம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயண நேரம் மிச்சமாகும்.

இதே போல் அகமதாபாத் - தோலேரா, கான்பூர் - லக்னோ, அமிருதசரபஸ் - பத்திந்தா - ஜாம்நகர், ஹைதராபாத் - ராய்ப்பூர், நாக்பூர் - விஜயவாடா ஆகிய நெடுஞ்சாலைகளை ஒட்டியும் ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.

சாலை அமைப்பும், ரயில் தண்டவாள அமைப்பும் வேறுபட்டவை என்பதால் இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் சில பிரச்சினைகள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image Credits - DNA India


புதியது பழையவை