உசிலம்பட்டி- ஆண்டிப்பட்டி இடையே ட்ராலி மூலம் ஆய்வு

புகைப்படம் - தினத்தந்தி

மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டத்தில், முதற்கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை முதலில் அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டது. எஞ்சியுள்ள உசிலம்பட்டி - போடி அகல ரயில் பாதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வரை 21 கிலோ மீட்டர் தூரத்தில் அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு அந்தப் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன.

இதனைத் தொடர்ந்து இந்த பாதையை ரெயில்வே தலைமை நிர்வாக அதிகாரி (கட்டுமானம்) ரவீந்திரபாபு, தலைமை பொறியாளர் இளம்பூரணன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வரையில் அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில் பாதையை டிராலியில் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.