பாம்பன் பாலத்தில் கோளாறு : ராமேஸ்வரம் 🔄 சென்னை எழும்பூர் ரயில், மண்டபம் 🔄 சென்னை எழும்பூர் இடையே மட்டுமே இயங்கும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

ராமேஸ்வரம்🔄 சென்னை எழும்பூர் இடையே தினசரி சிறப்பு ரயில், கடந்த 2ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், நுாற்றாண்டு கண்ட பாம்பன் ரயில் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் மேல்புறத்தில் அக்.,3 ல் ஏற்பட்ட லேசான விரிசல் குறித்து, அங்கு பொருத்தியுள்ள சென்சார் கருவியில் தெரிந்தது. இதனையடுத்து ஐ.ஐ.டி.,யின் இரும்பு கட்டுமான பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்விற்கு பின்னர் பாம்பன் பாலத்தில் ரயில்கள் இயக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக சென்னை எழும்பூர் 🔄 ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மண்டபம் வரை மட்டுமே இயங்கும்.

அதன்படி இந்த ரயில் மண்டபம் 🔄 சென்னை எழும்பூர் இடையே மட்டுமே இயங்கும். மண்டபம் 🔄 ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

02205 சென்னை எழும்பூர் ➡️ மண்டபம் சிறப்பு ரயில், எழும்பூரில் இருந்து காலை 11:15க்கு புறப்பட்டு மறுநாள் காலை 4:15க்கு மண்டபம் ரயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்கத்தில் 02206 மண்டபம் ➡️ சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், இரவு 8:55க்கு மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 3:15க்கு எழும்பூர் ரயில் நிலையம் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.

அட்டவணை விவரம் 👇
02205 எழும்பூர் ➡️ மண்டபம்நிறுத்தம்02206 மண்டபம் ➡️ எழும்பூர்
17.45சென்னை எழும்பூர்7.15
------மாம்பலம்06.33/06.35
18.13/18.15தாம்பரம்06.13/06.15
18.43/18.45செங்கல்பட்டு05.43/05.45
19.08/19.10மேல்மருவத்தூர்05.08/05.10
19.33/19.35திண்டிவனம்04.43/04.45
20.20/20.25விழுப்புரம்04.05/04.10
21.08/21.10விருத்தாசலம்03.20/03.22
21.49/21.50அரியலூர்----
22.30/22.32ஸ்ரீரங்கம்-----
23.15/23.25திருச்சி01.30/01.40
00.08/00.10புதுக்கோட்டை00.03/00.05
00.48/00.50காரைக்குடி23.28/23.30
---தேவகோட்டை ரோடு23.14/23.15
01.28/01.30சிவகங்கை22.38/22.40
01.58/02.00மானாமதுரை22.13/22.15
02.23/02.25பரமக்குடி21.43/21.45
02.48/02.50ராமநாதபுரம்21.18/21.20
4:15மண்டபம்20.55