நீலகிரி மலை ரயிலை இயக்க திட்டம் !


கொரோனோ தொற்று பாதிப்பால், கடந்த மார்ச், 18ல் இருந்து நீலகிரி மலை ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில், தற்போது சுற்றுலா பயணிகள் உதகையை சுற்றி பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விரைவில் மலை ரயிலை இயக்க, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக நேற்று(அக். 7) குன்னுார் - கேத்தி இடையே சோதனை ஓட்டம் நடந்தது. அதில், இரு பெட்டிகளுடன் டீசல் இன்ஜின் சென்று வந்தது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், வருகின்ற, அக். 15ம் தேதிக்கு பின், சிறப்பு நீலகிரி மலை ரயில் இயக்க வாய்ப்புள்ளதாகவும். அதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர்.