ரயில் நிலையங்களில் உணவு சமைத்து வழங்க கேட்டரிங்களுக்கு அனுமதி

ரயில்வே கேன்டீன், 'புட் பிளாசா, ஜன் அஹர்ஸ், செல் கிச்சன்ஸ்' பயணியர் ஓய்வறை ஆகியவற்றில் சமைக்கப்பட்ட உணவுகளை 'பார்சல்' ஆக விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்து வந்த தளர்வுகளையடுத்து ரயில் போக்குவரத்து தற்போது துவங்கியுள்ளது.

எனினும், பயணிகளுக்கு ரயிலிலேயே உணவு சமைத்து வழங்கும் கேட்டரிங்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் ரயில் நிலையங்களில் உணவு சமைத்து பயணிகளுக்கு விற்பனை செய்ய கேட்டரிங்குகளுக்கு அனுமதியை ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது. 

மேலும் நடைமேடையிலும் உணவுகளை விற்பனை செய்ய அனுமதி ரயில்வே நிர்வாகம் அளித்துள்ளது.

நெறிமுறைகள்.

பயணிகள் யாரும் கூட்டமாக நின்று உணவு உண்ண அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உணவுகளை எடுத்துச் சென்று அவர்கள் இருக்கைகளில் அமர்ந்து உண்ண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.