பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஐ.ஆர்.சி.டிசியுடன் இணைந்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் சேவையை துவங்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக அமேசான் இருந்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் மட்டுமின்றி உணவு வழங்கும் சேவை, பணப்பறிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. 

பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சியுடன் இணைந்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் சேவையையும் அமேசான் தற்போது இந்தியாவில் தொடங்கியுள்ளது. 

இந்த அம்சம் தற்போது அமேசான் ஆண்ட்ராய்டு பயன்பாடு மற்றும் மொபைல் வலைத்தளங்களில் மட்டுமே கிடைக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் அமேசான் பே பக்கத்துக்கு சென்ற பின்னர் பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். 

மேலும் அமேசானில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு கேஸ்பேக் ஆஃப்பர்களும் வழங்கப்படுகின்றன. இதில் முதல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10% வரை கேஸ்பேக் ஆஃப்பர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.