நாட்டிலேயே முதன்முறையாக ரயில் பயணிகளின் உடைமைகளை வீட்டில் கொண்டு சேர்க்கும் திட்டம் : வடக்கு ரயில்வே மண்டலம் துவக்கம்


ரயில் பயணிகளின் உடைமைகளை அவர்களின் இல்லத்திற்கு கொண்டு சேர்க்கவும், இல்லத்தில் இருந்து உடைமைகளை ரயில் பெட்டிக்கு கொண்டு வரவும் ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’ என்ற திட்டத்தை வடக்கு ரயில்வே மண்டலம் தொடங்க உள்ளது.

இந்த சேவை முதல்கட்டமாக டெல்லி கோட்டத்திற்கு உட்பட்ட புது டெல்லி, டெல்லி சந்திப்பு, ஹஸ்ரத் நிஜாமுதீன், டெல்லி கன்டோன்மென்ட், டெல்லி சராய் ரோகில்லா, காசியாபாத், குருகிராம் ஆகிய ரயில் நிலையங்களில் தொடங்குகிறது.

ஆன்ட்ராய்டு செல்போன், ஐ போன் வைத்திருப்போர் பயன்படுத்தும் வகையில் ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’ செயலி (BOW APP) விரைவில் அறிமுகம் செய்யப்படும். இதைப் பயன்படுத்தி பயணிகள் சேவையைப் பெறலாம். 

கட்டணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் !

இந்த சேவைக்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும். சுமையின் எடை, எண்ணிக்கை மற்றும் தூரத்தின்அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

கூடுதல் வருவாய்

பயணக்கட்டணம் அல்லாத வழியில் ரயில்வே ஈட்டும் வருவாயை இந்த சேவை உயர்த்தும்.

தனியார் மூலம் செயல்படுத்த திட்டம்.

இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம், தனியார் நிறுவனத்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டதால் இந்தசேவை வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ரயிலில் தனியாக பயணம் செய்யும் முதியோர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டம் மிக உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் நாடு முழுவதும் விரைவில் அறிமுகமாகவுள்ளது.